ஈபிஎஸ்-ஓபிஎஸ் உடன் அண்ணாமலை

சென்னையில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி மு. பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் மு.அண்ணாமலை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றார்.
அப்போது, பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் இன்று நேரில் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார்.
Tags :