ஊரடங்கில் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள டிஜிபி அறிவுரை
கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் காவல்துறையினரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து, தமிழக டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவுரைகள்:
காவல் துணை கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் காவலர்கள் ஒவ்வொருவரிடமும் ஊரடங்கு காலக்கட்டத்தில் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். ஆயுதப்படை காவலர்கள் அனைவருக்கும் சம்மந்தப்பட்ட ஆயுதப்படை காவல்துணைக் கண்காணிப்பாளர் ஊரடங்கு காலக்கட்டத்தில் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
50 வயதைக் கடந்த காவலர்களுக்கும் மற்றும் நோய்களால் அவதிப்படும் காவலர்களுக்கும் ஊரடங்கு காலக்கட்டத்தில் இலகுவான பணி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். அவர்களை வாகன சோதனை மற்றும் பிக்கெட்டிங் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தக் கூடாது. பெண் காவலர்களை வாகன சோதனை பணிக்கும் மற்றும் பிக்கெட்டிங் பணி போன்றவற்றில்ஈடுபடுத்தக் கூடாது. காவலர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி ஒவ்வொருவரும் 5 மணி நேர ஷிப்ட் முறையில் பணியாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக்கொண்டுள்ள காவலர்களை மட்டுமே கூட்டம் கூடும் இடங்களான மார்க்கெட் போன்றவற்றில் பணி அமர்த்த வேண்டும்.அனைத்து காவலர்களும் தவறாமல் பாதுகாப்புப் பணியில் காலை 6 மணி முதல்ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஊரடங்கு காலக்கட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு காவலரும் தங்கள் உடலின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து தகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.
கிருமி நாசினி கொண்டு தங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்வதுடன், குறிப்பிட்ட இடைவெளியில் சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இடத்தில் காவல்துறையினர் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவமனை போன்ற இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கோவிட்-19 தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்றி, தகுந்த பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும். பிக்கெட்டிங் பணியில் உள்ள காவலர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். அங்கு தேவையான நிழற்குடை, குடிநீர், கிருமிநாசினி போன்ற தேவையான உபகரணங்கள் இருக்க வேண்டும். அனைத்து காவலர்களும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.* பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ளக்கூடாது.
பிற அரசுத் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறையினர், தூய்மை பணியாளர்கள் போன்றவர்களுடன் வாக்குவாதத்தில்
ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக் கூடாது.கிறார்களா என்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிகளிடம் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்துக்கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
சாலையோர வியாபாரிகளிடம் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை கடுமையான முறையில் நடத்துதல் கூடாது. ஊரடங்கு காலக்கட்டத்தில் பால், மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துச்செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும்.* ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் நேரங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் வாகனங்களுக்கு பாதுகாப்பு வாகனம் பின் தொடர அவை எடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
காவல் நிலையத்தின் வெளியே சாமியானா பந்தல் போடப்பட்ட மனுதாரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கே அமர வைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
ஊரடங்கு விதிமுறை மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது. அப்படியே வாகனத்தினை கைப்பற்றினாலும் சில மணி நேரங்களில் அவற்றை விடுவித்தல் வேண்டும். இ-பாஸ் வைத்து பயண அனுமதி பெற்றுள்ள வாகனங்களை அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகள்படி அனுமதித்தல் வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கான வழியை ஏற்படுத்துதல் வேண்டும். கைப்பற்றப்படும் வாகனங்களை காவல்நிலையத்தில் வைத்திருத்தல் கூடாது.
ஊரடங்கு காலக்கட்டத்தில் ஒவ்வொரு காவல்துறையினரும் கண்டிப்பாக அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு, தங்கள் உடல்நலனில் மிகுந்த கவனம்கொண்டு, சிறப்பான முறையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.
Tags :