கடலில் கன்டெய்னர்கள மிதந்து வந்தால் மீனவர்கள் தொட வேண்டாம்-அதிகாரிகள் எச்சரிக்கை.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடந்த 25-ந்தேதி கடலில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்ததாக கூறப்படுகிறது.
அரபிக்கடலில் பலத்த காற்று வீசியதால் கொச்சி அருகே நடுக்கடலில் சென்றுக்கொண்டிருந்த சரக்கு கப்பல் திடீரென்று கவிழதொடங்கியது.அந்த கப்பலில் பணியாற்றிய 24 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.தொடர்ந்து காற்றின் வேகத்தினால் கப்பல் கடலில் மூழ்கியது.கன்டெய்னர்கள் கடலில் மிதந்து கரைசேரத்தொடங்கியுள்ளன.
சரக்கு கப்பலில் ரசாயனம் இருந்த கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தது. கடலில் ரசாயனம் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு கப்பலில் இருக்கும் 640 கண்டெய்னரில், 13 கண்டெய்னரில் மிக ஆபத்தான பொருட்கள் உள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் தரப்பிலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொச்சி கடற்பகுதியில் மூழ்கியுள்ள சரக்கு கப்பலின் கொள்கலனில் இருந்த ரசாயனங்கள் கடலில் பரவியுள்ளதாகவும், மூழ்கிய கப்பலின் அருகே சுமார் 2 கடல் மைல் தொலைவில் எண்ணை கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பெறப்பட்டுள்ளது. இக்கப்பலில் இருந்து மேலும் எண்ணை கசிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாகவும், எண்ணை கசிவு கடற்கரையினை நோக்கி நகர்ந்து செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கரை ஒதுங்கும் கண்டெய்னர் மற்றும் அதில் உள்ள பொருட்களை மீனவர்களோ அல்லது பொதுமக்களோ கையாளக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மாறாக கண்டெய்னர்கள் அல்லது எண்ணை கசிவுகள் காணப்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
Tags : கடலில் கன்டெய்னர்கள மிதந்து வந்தால் மீனவர்கள் தொட வேண்டாம்-அதிகாரிகள் எச்சரிக்கை.