நீலகிரியில் மீண்டும் ரெட் அலர்ட்..

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்துக்கு தடை என மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். பாறைகள் அகற்றும் வரை கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டாது. அரசுப் பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே இயங்கும். மேலும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags : நீலகிரியில் மீண்டும் ரெட் அலர்ட்..