முதல்வர் பிறந்தநாளில் பொதுக்கூட்டம்

by Staff / 21-02-2023 12:44:39pm
முதல்வர் பிறந்தநாளில் பொதுக்கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 1ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

 

Tags :

Share via