குழந்தையை கடித்துக்கொன்ற நாய்கள்

by Staff / 21-02-2023 12:47:48pm
குழந்தையை கடித்துக்கொன்ற நாய்கள்

ஹைதராபாத்தில் பதற வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சிறுவனை நடுரோட்டில் நாய்கள் சுற்றி வளைத்து கடித்துக் கொன்றுள்ளன. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் சிறுவன் உயிரிழந்தான். நிஜாமாபாத் மாவட்டம் இந்தல்வாய் பகுதியைச் சேர்ந்த கங்காதர், வேலைக்காக வந்து பாகம்பர்பேட்டையில் தங்கி உள்ளார். இவரது மகன் பிரதீப்பை ஞாயிற்றுக்கிழமை சாலையில் நாய்கள் சூழ்ந்துகொண்டு கடுமையாகக் கடித்துள்ளன. சிறுவனின் கால்கள் மற்றும் கைகள் கடித்து குதறப்பட்டதில் படுகாயம் அடைந்தான். ரத்த வௌத்தில் மயங்கிய சிறுவனை மருத்துவமனைக்கு தந்தை கொண்டு செல்வதற்குள் உயிரிழந்தான். இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories