சொன்னதைச்செய்தார் அண்ணாமலை

by Editor / 27-12-2024 11:56:51am
சொன்னதைச்செய்தார் அண்ணாமலை

சென்னை அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு பொறியல் படிக்கும் மாணவியை  அங்கு பிரியாணி கடை நடத்தும் நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வில்  அவர் கைது செய்யப்பட்ட பின்பு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்ற நிலையில் கோவையில் நேற்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மாணவி பாலியல் துன்பத்திற்கு உள்ளானது குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்த அவர் இந்த ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என்றும் நாளை என் வீட்டில் முன்பாக சவுக்கால் அடித்துக் கொள்வேன் என்று பேட்டி அளித்திருந்த நிலையில் இன்று அவர் வீட்டு முன்பாக வெற்றிவேல் வீரவேல் என்று தொண்டர்கள் கோஷத்திற்கிடையே அவர் சாட்டையால் தன் உடம்பின் மீது ஐந்து சவுக்கடிகளை அடித்துக் கொண்டார்.

 

Tags : சொன்னதைச்செய்தார் அண்ணாமலை

Share via