ஆட்சியில் பங்கு கேட்ட அன்புமணி.. கூட்டணிக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 16) கட்சியின் 34வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தனது சமூக வலைப்பக்கத்தில் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, 'ஆட்சியில் பங்கு' என்ற விஷயத்தை குறிப்பிட்டு இருந்தார். அதிமுக கூட்டணியில் பாமக உள்ளது என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பேசியிருந்த நிலையில், அன்புமணியின் கருத்து சலசலப்பை உண்டாக்கியது. இதனால் சிதம்பரத்தில் பேசிய EPS பாமக கூட்டணிக்கு வரும் என நம்புவதாக சூசக பதில் கூறி, அன்புமணி ராமதாஸின் எண்ணத்துக்கு ஆப்பு வைத்துள்ளார்.
Tags :