.ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

by Staff / 29-04-2024 03:42:56pm
.ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணை மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
நில மோசடியுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories

Logo