மதுரை மாநாட்டிற்கு வந்த அதிமுக கிளை செயலாளர் மயக்கம் அடைந்து மரணம்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பத்ரிகானூர் கிராமத்தை சேர்ந்த சென்னையன் (73) என்பவர் அதிமுக கிளை செயலாளராக இருந்துள்ளார். மதுரை மாநாட்டிற்கு சென்றவரிடம் செல் போன் இல்லாததால் உடன் சென்றவர்கள் வீட்டிற்கு சென்று இருப்பார் என்று எண்ணி அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அவர் மாநாட்டில் மயக்கம் அடைந்து மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவல் நேற்று மாலை நேரத்தில் அவர்களது உறவினர்களுக்கு அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : அதிமுக கிளை செயலாளர் மயக்கம் அடைந்து மரணம்.