விபத்துக்குள்ளான ஜெட் விமானம்: தீயில் எரிந்த இருவர்

by Staff / 10-02-2024 12:33:12pm
விபத்துக்குள்ளான ஜெட் விமானம்: தீயில் எரிந்த இருவர்

ஐந்து பேருடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இரட்டை எஞ்சின் கோளாறு காரணமாக ஜெட் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர், இருவர் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். புளோரிடாவில் உள்ள நேபிள்ஸ் ரிசார்ட் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 

Tags :

Share via
Logo