கழுதையிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 47 பேர் கைது..

by Admin / 31-08-2023 12:07:40am
 கழுதையிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 47 பேர் கைது..

கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் குடியிருக்க இடம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பல முறை மனு அளித்தும், தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் இது வரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்பதால் உடனடியாக தகுதியுள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பாபு தலைமையில்  போராட்டம் நடைபெற்றது.  இளையரசனேந்தல் கிளை செயலாளர் இன்னாசி முத்து முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் கருப்பன், நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், கோவில்பட்டி நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், தாலுகா உதவி செயலாளர்கள் ராமகிருஷ்ணன்,  சுரேஷ்குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 47பேரை போலீசார் கைது செய்தனர்.

 கழுதையிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 47 பேர் கைது..
 

Tags :

Share via