பெண் ஊழியர்களின் குளியலறையில் மறைக்கப்பட்ட கேமரா-ஒரு பெண் ஊழியர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகில் நாகமங்கலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், விடுதி குளியலறையில் மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டதை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விடுதியில் பெண் ஊழியர்களின் குளியலறையில் மறைக்கப்பட்ட கேமரா கண்டறியப்பட்ட சம்பவத்தில்,தொடர்புடைய வடமாநில ஒரு பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், விடுதியில் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யக் கோரி போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
இங்கு வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்குவதற்காக லாளிக்கல் பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக ”விடியல் ரெசிடன்சி” என்ற பெயரில் விடுதி கட்டப்பட்டுள்ளது. 11 அடுக்குகள் கொண்ட எட்டு கட்டடங்களில் பணியாற்றும் பெண்கள் தங்கியுள்ளனா்..
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags :



















