தொழிலாளர்களின் குருதியைக் குடிக்கும் திமுக அரசு - சீமான் கண்டனம்

by Staff / 23-09-2023 11:56:41am
தொழிலாளர்களின் குருதியைக் குடிக்கும் திமுக அரசு - சீமான் கண்டனம்

மின்வாரியத்தில் 80,000க்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் அவற்றை நிரப்ப திமுக அரசு மறுத்து வருவது உடல் உழைப்பு தொழிலாளர்களின் குருதியைக் குடிக்கும் கொடுஞ்செயலாகும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கள உதவியாளர் தேர்வில் வெற்றிப்பெற்ற 5000 பேருக்கும் பணி வழங்குவதாக 2021 தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டரை ஆண்டுகளாக அதனை நிறைவேற்ற மறுத்துவருவது, வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும். இனியும் காலம் தாழ்த்தாமல், மின்வாரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via