வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.

நாகர்கோவில் புத்தன் பங்களா ரோடு அரசமூடு ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த வர் ராதா (வயது 56), ஆட்டோ டிரைவர். இவரது மகன் வினோத் (26). இவர், நாகர்கோவிலில் உள்ள வணிக வளாகத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். நேற்று வினோத் மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வாந்தி எடுத்து உள்ளார். உடனே அவரது தந்தை ராதா சென்று பார்த்த போது விஷ வாடை அடித்தது. இதுகுறித்து வினோத்திடம் கேட்டபோது விஷம் குடித்து இருப்பதாக தெரி வித்தார். அதிர்ச்சி அடைந்த வர் உடனடியாக மகனை மீட்டு சிகிச்சைக்காக நாகர் கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றிவினோத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடசேரி போலீசில் ராதா புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், ஏட்டு சிவக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வினோத் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். அவர் காதல் தோல்வி யால் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பலியான வினோத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராள மானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
Tags :