ராமேஸ்வரம் டூ விழுப்புரத்திற்கு சிறப்பு அதிகவேக எஸ்க்பிரஸ் ரயில் சேவை. 

by Editor / 25-04-2025 09:40:59am
ராமேஸ்வரம் டூ விழுப்புரத்திற்கு சிறப்பு அதிகவேக எஸ்க்பிரஸ் ரயில் சேவை. 

கோடைகால கூட்ட நெரிசலை கட்டுபடுத்த ரயில் பயணிகள் நலனுக்காக ராமேஸ்வரம் டூ விழுப்புரத்திற்கு சிறப்பு அதிகவேக எஸ்க்பிரஸ் ரயில் சேவை வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் ரயில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது இதில் கோடைகால பயணிகளின் அதிகமாக பயணம் மேற்கொள்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகளை சிரமம் அடைவதை தடுக்கும் வகையில் விழுப்புரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு மே 2-ம் தேதி முதல் தொடங்கி ஜூன் 30-ம் தேதி வரை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.35 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அன்று இரவு 11.35 மணிக்கு விழுப்புரம் சென்று விடும். மறுமார்க்கத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 4.15 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும். அன்று காலை 11.40 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு வந்திவிடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

 

Tags : ராமேஸ்வரம் டூ விழுப்புரத்திற்கு சிறப்பு அதிகவேக எஸ்க்பிரஸ் ரயில் சேவை 

Share via