ஊட்டியில் ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.

by Editor / 25-04-2025 09:49:23am
ஊட்டியில் ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.

 தமிழக அரசுக்கு போட்டியாக பெரும் சர்ச்சைக்கு இடையே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் நடைபெறுகிறது.மாநாட்டை நடத்துவதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழக  துணைவேந்தர்களுக்கான மாநாடு உதகையில் இன்று தொடங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்தி வருகிறார். நான்காவது ஆண்டாக, உதகை ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த 2 நாள் மாநாட்டை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மூன்று மத்திய பல்கலை துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : ஊட்டியில் ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.

Share via