விண்வெளி துறையின் சாதனை தங்க எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது-இஸ்ரோ தலைவர் நாராயணன்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் வி எஸ் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் இந்திய விண்வெளி துறையின் ஆராய்ச்சி மையத் தலைவர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது.
கடந்த வருடம் ஆதித்யா எல் 1 விண்ணில் ஏவப்பட்டது இது பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஒரு புள்ளியில் நிறுத்தப்பட்டு சூரியனை ஆய்வு செய்கிறது. இதுவரை ஐந்து டெராபைட் தகவல்களை ஆய்வு செய்து அனுப்பி இருக்கிறது. ஜனவரி 6 ம் தேதி சூரியனிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அனுப்பி இருக்கிறோம். இது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ஜனவரி 16 ம் தேதி இரண்டு செயற்கைக்கோள்களை பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் மணிக்கு 28000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருப்பஒன்றாக இணைத்துள்ளோம். இந்த சாதனை செய்த உலகத்தின் நான்காவது நாடாக நாம் இருக்கிறோம்.
சந்திராயன் மூன்று நிலவில் இறங்கியது. தற்போது தயாராகும் சந்திராயன் 4 செயற்கைக்கோள் சந்திராயன் 3 ஐ விட இரண்டு மடங்கு எடை கொண்டது. அதனால் ஒரே ராக்கெட்டில் கொண்டு செல்ல முடியாது. இரண்டு ராக்கெட்டுகளில் கொண்டு சென்று இணைத்து பின்னர் நிலவில் தரையிறக்கப்படும். நம் நாட்டின் விண்வெளி துறை சார்பாக 1979 ல் விண்ணில் முதல் முதலாக விண் ஏவூர்தி அனுப்பப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1980ல் இரண்டாவது அனுப்பப்பட்ட ஏவூர்தி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 100வது ராக்கெட் நான் ஜனவரி 13 ல் பதவி ஏற்ற பிறகு முதன் முதலாக
ஜனவரி 29ம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்ட நூறாவது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. நம்முடைய விண்வெளி துறையின் சாதனை தங்க எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருளில் இயங்கும் இயந்திரங்கள்,உந்து விசை தரக்கூடிய இஞ்சின்கள் சோதனை செய்யக்கூடிய சோதனைகூடம் ஆயிரம் கோடி மதிப்பிலானது அதனை கடந்த ஆண்டு பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த சோதனை கூடத்தில் இரண்டாவதாக இன்று நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தயாரித்த ( NISA ) செயற்கைக்கோள். விண்ணிலிருந்து மழை பெய்தாலும் மேகமறைத்தாலும் அதைத் தாண்டி பூமியை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டது. இன்னும் இரண்டு மாதங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஆண்டு மற்றொரு முக்கிய திட்டமாக ஆட்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு முன்னோட்டமாக ஆளில்லாமல் 3 மூன்று முறை சோதனை அடிப்படையில் விண்ணுக்கு அனுப்பப்படும். அதற்கான முதல் விண் ஊர்தி இந்த வருடம் அனுப்பப்பட உள்ளது.
பாரத பிரதமர் தான் விண்வெளி துறையின் அமைச்சர் புதிதாக இரண்டு ஏவுதளங்கள் அமைக்க நிதி ஒதுக்கி இருக்கிறார். அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. நான்காவது ஏவுதளம், குலசேகரன் பட்டினத்தில் அமைக்கப்பட உள்ளது. நாட்டின் முதல் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டா, இரண்டாவது ஏவுதளம் குலசேகரப்பட்டத்தில் அமைய உள்ளது. இதற்காக பாரத பிரதமர் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார். தமிழக அரசின் முயற்சியால் நிலம் எடுக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இங்கு பணிகள் முழுவதும் முடிவடைந்து ராக்கெட் அனுப்பப்படும். கன்னியாகுமரியில் ( ஸ்பேஸ் பார்க் ) விண்வெளி பூங்கா மக்கள் பார்க்கும் வகையில் அமைக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு 14 ஏக்கர் நிலம் தமிழக அரசு கொடுத்துள்ளது. இதில் பணிகள் தொடக்கப்பட்டுள்ளது இன்னும் ஒன்றரை வருடத்தில் பூங்கா மக்கள் பார்வைக்கு தயாராகி விடும். அடுத்ததாக சந்திராயன் 3 நிலவில் தென் துருவத்தில் தரை இறங்கிய உலகத்தில் முதல் நாடாக இந்தியா ஆனது. சந்திராயன் 4 நிலவில் மண்ணை எடுத்து சோதனை செய்யும், இந்த திட்டத்திற்கான அனுமதி கொடுத்துள்ளது. செவ்வாய் கோள் ஆராய்ச்சிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சந்திராயன் 5 இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து கூட்டு முயற்சி செய்யப்படுகிறது. இந்தியா சார்பில் விண்வெளி ஆய்வுக்கூடம் 2035 ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும். ஐந்து பாகங்களாக பொருட்கள் கொண்டு செல்லப்படும் நிலையில் முதல் பாகம் 2028 ம் ஆண்டு அனுப்பப்படும். 1980 ம் ஆண்டு நாம் அனுப்பிய முதல் ராக்கெட் 17 டன் எடை, 40 கிலோ கிராம் செயற்கைக்கோள். ஆனால் இப்போது ஆயிரம் டன் எடை கொண்ட ராக்கெட், 30,000 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணிற்கு கொண்டு செல்கிறது. 45 வருடங்களில் 1000 பங்கு சக்தி கொண்ட ராக்கெட் செய்வதற்கு 8,500 கோடி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 55 செயற்கைக்கோள்கள் விண்ணில் சுற்றி நமக்கு தகவல்களை தந்து கொண்டிருக்கிறது. இதனை இரண்டு மடங்காக்கும் திட்டங்கள் உள்ளது.
சுனாமி பூகம்பம் நிலநடுக்கம் போன்றவற்றை முன்பு விட சிறப்பாக சொல்லும் அளவிற்கு இஸ்ரோ முன்னேறியுள்ளது. இஸ்ரோவில் 20000 பேர் பணியில் உள்ளனர். ஆனால் இஸ்ரோவிற்கு தேவையான 75% பொருட்கள் தனியாரிடம் இருந்துதான் பெறப்படுகிறது. இந்தியாவில் கடந்த எட்டு வருடங்களில் 310 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வந்துள்ளது. மாணவர்கள் இதிலும் சேர்ந்து பணி செய்யலாம்.
இந்த நிகழ்ச்சியில் மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தின் இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் மற்றும் பள்ளி தாளாளர் ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags : இஸ்ரோ தலைவர் நாராயணன்