இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு -பிரதமர் மோடி கட்டியை தழுவி வரவேற்பு .
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்றடைந்தார் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு மற்றும் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு அவரது மனைவி சாரா நெதன் யாகு நேரில் வந்து மோடியை வரவேற்றனர். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி நட்பை வெளிப்படுத்திக் கொண்டனர். பின்னர் பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றமான கினெ செட்டில் உரையாற்றினார். பாதுகாப்பு ,தொழில்நுட்பம் ,செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
Tags :


















