புதிய தமிழகம் கட்சிக்கு  டிவி சின்னம் ஒதுக்க கோரிய  வழக்கு ஒத்திவைப்பு

by Editor / 27-09-2021 04:44:49pm
புதிய தமிழகம் கட்சிக்கு  டிவி சின்னம் ஒதுக்க கோரிய  வழக்கு ஒத்திவைப்பு



உள்ளாட்சி தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தங்களுக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில், மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.ஆனால், புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து செப்டம்பர் 17ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 


இந்த உத்தரவை ரத்து செய்து, உள்ளாட்சி தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வி.கே.அய்யர் வழக்கு தொடர்ந்திருந்தார்.


 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்து பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி துரைசுவாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விளக்கத்தை ஆய்வு செய்ய மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

Tags :

Share via