அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு.. போலீசார் பரபரப்பு அறிக்கை

by Editor / 10-06-2025 12:36:32pm
அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு.. போலீசார் பரபரப்பு அறிக்கை

தாம்பரம் அரசு பெண்கள் விடுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த  அறிக்கையில், "6 ஏக்கர் பரப்பு கொண்ட அரசு விடுதியில் நுழைவு வாயில் உட்பட 2 இடங்களில் மட்டுமே CCTV கேமிரா வேலை செய்கிறது. 12 மணிநேரத்துக்கும் மேலாக ஒரேயொரு ஆண் காவலாளி வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சம்பவ நாளில் பெண் கண்காணிப்பாளர் விடுப்பில் சென்றபோது, வேறு பெண் காப்பாளர் தற்காலிகமாக நியமிக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via