பார்வையற்ற முதியவரை வீடுவரை கொண்டுசென்றுவிட்டு வந்த காவலர் அதிகாரிகள் பாராட்டு.
மனிதர்கள் இயந்திரங்களை விட மிகவும் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம், சக உறவுகளை கூட திரும்பிப் பார்க்க முடியாத சூழலில் பொருளை ஈட்டுவதற்காக ஓடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம், நாளுக்கு நாள் பொருள் ஈட்டுகளில் உடைய வேகம் அதிகரிக்கிறது தவிர சக மனிதர்களை திரும்பிப் பார்க்க கூட நேரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், மனிதநேயம் என்பது மனிதர்கள் மத்தியில் மரித்து கொண்டிருக்கின்றது,இன்னும் மனிதநேயம் சில மனிதர்களிடம் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு சம்பவம் தான் தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சத்தியமூர்த்தி பாவூர்சத்திரம் அருகிலுள்ள முத்துகிருஷ்ணப்பேரியில் வசித்து வருகின்றார்.சம்பவத்தன்று பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தபோது பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முடியாமல் பார்வையற்ற முதியவர் ஒருவர் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்து அவர் கரம் பற்றி சாலையை கடக்க செய்து பின்பு மேல் அதிகாரியின் அனுமதி பெற்று முதியவர் வீடு வரை முதியவரை கொண்டு சென்று விட்டு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த காவலர் சத்தியமூர்த்தியின் செயல் அனைவரிடமும் பாராட்டைபெற்றுள்ளது.மேலும் மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர், ஒப்புக்கும்,கடமைக்கும் செயல்படாமல் உண்மைக்கு மாறாக செயல்படாமலும் மனசாட்சிக்கு தகுந்தார் போல் செயல்பட்ட சத்தியமூர்த்திக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Tags :