நாளை சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை

by Editor / 29-11-2024 01:56:23pm
நாளை சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், புயலாக வலுப்பெறுவதால் அது கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றார். 

 

Tags : நாளை சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை

Share via

More stories

Logo