தமிழக சட்டப் பேரவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்

by Admin / 20-01-2026 01:57:44pm
 தமிழக சட்டப் பேரவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்

 தமிழக சட்டப் பேரவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார்.பா.ஜ.க பிரதிநிதியாக ஆளுநர் உள்ளார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.எம் எஸ் எம் இ ல் தமிழகம் மூன்றாம் இடத்தில் தான் உள்ளது.தற்கொலை செய்து கொள்வது தனிப்பட்டது .அதற்கு அரசு பொறுப்பு ஏற்க முடியாது.போதைப் பொருள்கள் தமிழகத்திற்கு வரம்படாமல் தடுக்க பல்வேறு பாதுகாப்புகள் எல்லையில் போடப்பட்டுள்ளன. போதைப் பொருள் எங்கிருந்து வருகின்றன என்பதை பற்றி ஒன்றிய அரசுக்கு தெரியும் அதை அவர்கள் தடுக்கட்டும்.இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிறந்த கல்வியை வழங்கும் 18 பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும் தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது வழக்கம்.தமிழக முதல்வரை சூப்பர் முதல்வர் என்று சொல்வதற்கு விளக்கம் அளித்தார். மகளின் உரிமை தொகை திட்டம் தங்க மகள் திட்டம் நான் முதல்வர் திட்டம் காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பார்த்து பார்த்து செய்வதால் அவர் சூப்பர் முதல்வர் என்றும் சொன்னார்.ஆளுநர் மைக் ஆப் செய்யப்படவில்லை நீங்களும் மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தீர்கள் என்று செய்தியாளர்களை பார்த்து கேட்டார்.11.9% தமிழக பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதை நாங்கள் கூறவில்லை.பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியவுடன் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிடப்படுகிறது என்றால் அது ஏற்கனவே முன்பே தயாரிக்க வைக்கப்பட்டது என்பது உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அவர் இங்கிருந்து  செல்லும் பொழுது அறிக்கை வெளிவந்துள்ளது.

 

Tags :

Share via