புதுச்சேரியில் அமைச்சரவை பொறுப்பேற்பு

by Editor / 27-06-2021 03:55:21pm
 புதுச்சேரியில் அமைச்சரவை பொறுப்பேற்பு

 புதுச்சேரியின் முதல் அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.அதன்பிறகு, என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியிடையே அமைச்சரவை பகிர்ந்துகொள்ளுதல் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பாஜகவிற்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர், 3 அமைச்சர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை விவகாரத்தில் பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் இடையே சமாதானம் ஏற்பட்டதால், என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் அமைச்சர் பட்டியல் துணை நிலை ஆளுநரிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழா 27 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று 2.30 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ நமச்சிவாயம், சாய் சரவணகுமார்.,என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

 

Tags :

Share via

More stories