கூட்டணி என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது

by Staff / 24-11-2022 01:25:11pm
கூட்டணி என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தொடருமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இதற்கு தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும். தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது. கூட்டணி தொடர்பாக கேள்வி வரும்போது கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கின்றன. இத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என மாநில தலைவராக சில கருத்துக்களை முன்வைப்பேன் என கூறியுள்ளார். அதேபோல், கூட்டணியில் இருக்கிறது என்பதற்காக கூட்டணி கட்சிகள் செய்யும் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories