பஞ்சாபில் 5 அமைச்சர்களின் துறைகளை மாற்றிய முதல்வர்

பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் அமைச்சரவையில் ஐந்து பேரின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குர்மீத் சிங், குல்தீப் சிங், லால்ஜித் சிங், பால்கர் சிங் மற்றும் குர்மீத் சிங் குடியன் ஆகியோர் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். குர்மீத் சிங்குக்கு நீர்வளம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், இளைஞர் சேவைகள் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. குல்தீப் சிங்குக்கு வெளிநாட்டு விவகாரங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையும், லால்ஜித் சிங்குக்கு போக்குவரத்து துறையும் வழங்கப்பட்டது. பால்கர் சிங்கிற்கு உள்ளாட்சித்துறையும், குல்மீத் சிங் குடியனுக்கு விவசாயம், மீன்வளம்-பால்வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
Tags :