தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இதையடுத்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (டிச.,23) வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும்.இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.தமிழக வட மாவட்டங்களின் கடலோரம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags : தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.