ஓம் சக்தி, பராசக்தி, தி.மு.க தீய சக்தி- தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ,

by Admin / 04-03-2026 12:57:07pm
 ஓம் சக்தி, பராசக்தி, தி.மு.க தீய சக்தி- தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ,

தஞ்சாவூரில் நடைபெற்ற தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்.பச்சை துண்டை தோளில் அணிந்திருந்தாா்.  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ,திமுகவை முதலமைச்சரை மட்டுமே குறியாக வைத்து  பேச ஆரம்பித்தார்.. தஞ்சை டெல்டா பகுதி என்பதால் தஞ்சை மக்களை கவர வேண்டும் என்பதற்காக விவசாயம் சார்ந்த பிரச்சனைகளையும் அதனோடு ஒட்டிய மீனவர்களுடைய பிரச்சனையையும் நீட் தேர்வை பற்றிய கருத்தையும் வெளியிட்டதோடு பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய ரேஷன் கடை பற்றிய விவரத்தையும் வெளிப்படுத்தினார்.. மீண்டும் திமுக வை, ஓம் சக்தி, பராசக்தி, திமுக தீய சக்தி என்றே தம் கருத்தை பதிவு செய்தார். திமுகவும் அதிமுகவும் வெளியே அடித்துக் கொள்வது போன்று நாடகமாடி நாம் இரு கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற மாதிரியாக செயல்படுகிற செயல்கள் இனி எடுபடாது என்றும் இந்த விஜய் மக்களினுடைய சக்தியாக மாறிவிட்டதாகவும் மக்களினுடைய வீட்டிற்குள்ளேயே வெற்றிகழக வெற்றிக்கான வாக்குகளை மக்கள் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆளப்போகிறது இந்த விஜய் தான் என்றும் நம்பிக்கையோடு தன்னுடைய வார்த்தைகளை வெளியிட்டார்.. பல்வேறு விதங்களில் அடக்கி விடலாம் என்று ஸ்டாலின் சாரும் திமுகவும் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் ஆனால், அது இனி ஒரு காலத்திற்கும் நடக்காது என்கிற மாதிரியாகவும் அவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார். உண்மையான ஒரு மக்கள் பிரதியாக நாம் மட்டும்தான் இருக்கிறோம் என்றும் டெல்டா காரர் என்று சொல்லி மக்களினுடைய காதில் டால்டா ஊட்டி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்றும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் மழையிலே நனைந்து வீணாவதாகவும் ஆட்சி முடிகிற நேரங்களில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மக்களை ஏமாற்றுகிறார் என்றும் நாம் ஆட்சிக்கு வந்த உடனே முதலிலேயே என்னென்ன திட்டங்களை செய்யப் போகிறோம் என்று பட்டியலிட்டு அந்தத் திட்டங்களை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் முடிக்க முயற்சி செய்வோம் என்றும் திமுக கடன் வாங்கி கடன் வாங்கியே ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததோடு மீனவர்கள் பிரச்சனைக்கு கடிதம் எழுதி தூங்க போய் விடுகிறார் என்றும் மானே தேனே பொன்மானே என்று இப்படி எல்லாம் கடுகை எழுதுவதெல்லாம் வேலைக்கு ஆகாது ஒன்றிய அரசுக்கு உண்மையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் திமுக எந்த காலத்திலும் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வர முடியாது என்றும் அது அவருடைய அப்பா காலத்தில் கூட முடிந்ததில்லை என்றும் ஒவ்வொரு 500 குடும்ப அட்டைகளுக்கும் ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும் என்றும் அதிலே அடையாளங்கள் ஆண்களுக்கு ஆணும் பெண்களுக்கு பெண்ணும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அனைத்து ரேஷன் பொருள்களும் பாக்கெட் வழியாகவே கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.. கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவோம் என்றும் கரும்புக்கு ஆதார வழியாக 4000 தருவோம் என்று சொன்னதெல்லாம் என்ன ஆயிற்று என்கிற கேள்வியையும் முன் வைத்தார் இரண்டு ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளின் பிள்ளைகளின் கல்விச் சலவை அரசே ஏற்கும் என்றும் ஐந்து ஏக்கருக்கு மேலே இருக்கக்கூடிய விவசாயிகளினுடைய கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்வதற்கான முயற்சியை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார். ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் திரும்ப 5000 ரூபாய் கொடுத்தோம் எப்படி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த இடத்தில் இந்த விஜய் விடமாட்டேன் என்கிறான் என்றும் திமுக திமுகவைச் சாரினர். வழக்கமாக தன் தொண்டர்களை உறுதிமொழி எடுக்கச் சொல்வது போன்று இந்த மொழியும் உறுதிமொழி ஏற்க செய்தார். கரூர் பிரச்சனையிலிருந்து ஜனநாயகன்பட பிரச்சனை வரைக்கும் பலர் ஆதரவு தெரிவித்தார்கள் ஸ்டாலின் சாரும் பட்டும்படாமலும் ஆதரவு தெரிவித்தார் அவருக்கும் நன்றி என்று முத்தாய்ப்பு வைத்தார்.

 

Tags :

Share via

More stories