சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

by Admin / 28-07-2026 12:20:47am
சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது மதியத்திற்கு பிறகு குறிப்பாக இரவு எட்டு முப்பது மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 10 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசப்படும் என்றும் புதல் மற்றும் வியாழக்கிழமைகளில் மேகமூட்டமான சூழலும் அங்கே இடி மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

  நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நகரின் ஒரு சில பகுதிகளில் பகல் நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இரவு நேரத்தில் மழைக்கான வாய்ப்பு 20 சதவீதமாக குறையும் என்றும் நாள் முழுவதும் வானம் பொதுவாக ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36c டிகிரி ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 c யாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு சுமார் 12 மைல் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு சுமார் 59 சதவீதமாக பதிவாகலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via

More stories

Logo