ரஷிய அதிபர் புதினை கொல்ல முயற்சி.

by Staff / 16-09-2022 05:38:29pm
ரஷிய அதிபர் புதினை கொல்ல முயற்சி.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் யூரா வீக்லி நியூஸ் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது. சம்பவத்தன்று புதின் காரில் இல்லத்துக்கு திரும்பிகொண்டு இருந்தார்.

அவரது காருக்கு முன்னும் பின்னும் மற்ற கார்களில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டு இருந்தனர். புதின் கார் 3-வதாக சென்று கொண்டிருந்தது. அப்போது புதின் கார் மீது மர்ம மனிதர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo