அழகர்கோவிலில் குலதெய்வ வழிபாடு முடித்து சொந்த ஊர் திரும்பிய காரைக்குடி பக்தர்கள்..

by Staff / 10-08-2025 09:21:24am
அழகர்கோவிலில் குலதெய்வ வழிபாடு முடித்து சொந்த ஊர் திரும்பிய காரைக்குடி பக்தர்கள்..

மேலூர் அருகே உள்ள அழகர் கோவில்  ஆடித்திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். மேலும் இத்திருக்கோவில் ஏராளமான மக்கள் குல தெய்வமாக வழிபடும் கூடியதும் ஒன்றாகும்.

 இவ்விழாவில் பங்கேற்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருகை தந்து இவ்விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர், வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் இன்று வரையில் பழமை மாறாமல் 20-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில்  சுமார் 72-கிமீ தொலைவில் உள்ள அழகர்கோவிலுக்கு கடந்த வியாழக்கிழமை அன்று பயணம் செய்து திருக்கோவிலில் தங்கிருந்து   நடைபெற்ற ஆடித் தேரோட்ட திருவிழாவில்  கலந்து கொண்டும் நேர்த்திக்கடன் மற்றும் குலதெய்வ வழிபாட்டினை முடித்தும் சொந்த ஊருக்கு  திரும்பி சென்றனர்.

 

Tags : அழகர்கோவிலில் குலதெய்வ வழிபாடு முடித்து சொந்த ஊர் திரும்பிய காரைக்குடி பக்தர்கள்..

Share via