பி.எம்.டபிள்யூ காரில் வந்து சாலையோர டிவைடரில் அந்த அசிங்கம் செய்தவர் கைது.

by Editor / 09-03-2025 11:08:14am
பி.எம்.டபிள்யூ காரில் வந்து சாலையோர டிவைடரில் அந்த அசிங்கம் செய்தவர் கைது.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் நேற்று ( மார்ச் 8 ) எரவடா பகுதிலுள்ள சாஸ்திரி சவுக் சாலையில் வந்து கொண்டிருந்த பி.எம்.டபிள்யூ கார் சட்டென்று சாலையில் அப்படியே நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் சாலையின் மத்தியில் டிவைடரில் சிறுநீர் கழித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசார் சாலையில் அநாகரீகமாக நடந்த அந்த நபரை தேடினர். தொடர்ந்து, சதாரா மாவட்டத்தை சேர்ந்த கவுரல் அகுஜா என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை புனே நகரிலுள்ள எரவாடா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி கைது செய்தனர். இவருடன் காரில் இருந்த பாக்யாஷ் கோயல் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் நடந்த போது இருவரும் மது குடித்திருந்திக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, இருவரும் மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு கவுரம் அகுஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 8 மணி நேரத்துக்குள் போலீசாரிடம் சரண் அடைவதாகவும் கூறியிருந்தார். எனினும், போலீசார் காத்திருக்காமல் சதாரை சென்று அவரை தட்டி தூக்கினர். கவரவ் அகுஜா மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது உள்ளிட்ட 3 பிரிவுகளில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20121 ஆம் ஆண்டு கவுதம் அகுஜா அவரின் தந்தை மனோஜ் அகுஜா மீது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags : A man got out of a BMW and urinated on the divider in the middle of the road.

Share via