விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு ரிக்ட்ர் அளவுகோலில் 3.0 பதிவாகியுள்ளது.
விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 .06 மணி அளவில் நில அதிர்வு ரிக்ட்ர் அளவுகோலில் 3.0 பதிவாகியுள்ளது. சிவகாசிக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், திருத்தங்கள் மற்றும் கிருஷ்ணன் கோயில் ,கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான அதிர்வு உணரப்பட்டதாக தகவல். இந்நில அதிர்வால் வீடுகள் மற்றும் பாத்திரங்கள் லேசாககுலுங்கின. மக்கள் பயத்துடன் தெருக்களில் குழுமினர். ஆனால் உயிரிழப்பு, பெரிய அளவிலான எந்த சேதம்எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















