இன்ஸ்டாகிராமில் அதிகரிக்கும் போட்டோ ஷூட் மோகம்.

by Editor / 02-07-2023 11:25:20am
இன்ஸ்டாகிராமில் அதிகரிக்கும் போட்டோ ஷூட் மோகம். இன்றைய காலகட்டத்தில் பலரும் சமூகவலைதளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். காலை எழுவது முதல் தூங்குவது வரை என அனைத்தையும் லைக் மற்றும் வியூஸ்க்காக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் புதுமணத் தம்பதி ஒன்று தங்கள் ஹனிமூன் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். மலர்கள் நிரம்பிய நீச்சல் குளத்தில் இருவரும் உற்சாகமாக குளிப்பதையும், முத்தங்களை பரிமாறிக் கொள்வதையும் வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் @witty_wedding என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இந்த குரூப்பில் ஏராளமான தம்பதியினரின் திருமணம் ஆல்பம் வித்தியாசமான முறையில் இருக்கவேண்டுமென்பதற்காக ஏராளமான போட்டோ ஷுட் களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போட்டோ ஷூட் மோகம் எதில் போய்முடியுமென்பது தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் அதிகரிக்கும் போட்டோ ஷூட் மோகம்.
 

Tags :

Share via