கஞ்சா விற்பனை: ரவுடி உட்பட 2பேர் கைது

by Staff / 30-01-2023 05:10:19pm
கஞ்சா விற்பனை: ரவுடி உட்பட 2பேர் கைது

தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) லோகேஸ்வரன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.இதில், கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த முருகேசன் மகன் சிவபெருமாள் (27) மற்றும் கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த ரத்தினவேல் மகன் ரஞ்சித்குமார் (27) ஆகியோர் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைது செய்யப்பட்ட சிவபெருமாள் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும், ரஞ்சித்குமார் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும் உள்ளது.
 

 

Tags :

Share via

More stories