இன்று த. வெ .க . வில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இணைந்த அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி பதவிவழங்கினாா் த. வெ.க. தலைவர் விஜய்
இன்று த. வெ .க . வில் அதிமுக. காங்கிரஸ். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இணைந்த மூத்த அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி பதவிகளை த. வெ.க. தலைவர் விஜய் வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சரும் இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மகேந்திரன், அதிமுக கர்நாடக பிரிவு செயலாளர் புகழேந்தி, ஜவகர் அலி முதன்மை செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் ஊடக விவாதங்கள் மற்றும் கட்சியின் கருத்துக்களை கொண்டு செல்லும் நோக்கில் தேசிய செய்தி தொடர்பாளர்களாக காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர் அமெரிக்க நாராயணன், பெலிஸ் ஜெரால்டு , சசிரேகா, விவேக், கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைமை அலுவலகம் சார்ந்த தலைமை நிலைய செயலக முதன்மை செய்தி தொடர்பாளர்களாக தமிழக வெற்றிக்கழக மின்துறை அமைச்சரும் இணை பொது செயலாளருமான நிர்மல் குமாரும் துணைப் பொதுச் செயலாளர் அமைச்சருமான ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மாநிலச் செய்தி தொடர்பாளர்களாக 9 பேரும் மாநில வலைத்தள செய்தி தொடர்பாளராக மூன்று பேரும் நியமிக்கப்பட்டுள்ளர்.
Tags :


















