இதுதான் எனக்கு கடைசி தேர்தல் - பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உருக்கம்
பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும், புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'வேலூர் தொகுதியை வெற்றி தொகுதியாக பாமக சொந்தங்கள் மாற்ற வேண்டும். நான் 2016ஆம் ஆண்டு 2019ஆம் ஆண்டு என இரு முறை தேர்தலில் நின்றேன். 2019ஆம் ஆண்டு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டேன். தற்போது 4வது முறையாக போட்டியிடுகிறேன். இதுவே எனது கடைசி தேர்தல்' என்றார்.
Tags :