இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

by Admin / 11-02-2022 11:11:48am
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது நேற்றைய பாதிப்பைக் காட்டிலும் குறைவு. இதன் எதிரொலியாக நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம், தற்போது 3 புள்ளி 89 சதவீதமாக குறைந்துள்ளது.

தற்சமயம் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 6 லட்சத்து 97 ஆயிரத்து 802 ஆக குறைந்துள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை காட்டிலும் 1 புள்ளி 64 சதவீதம் குறைவாகும்.

நேற்று ஒரே நாளில் தீவிர தொற்றுக்கு 657 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இன்று 341 பலிகள் பதிவாகியுள்ளன.  

இதன் எதிரொலியாக நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 177 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 802 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதனிடையே நாடு முழுவதும் இதுவரை 171 கோடியே 79 லட்சத்து 51 ஆயிரத்து 432 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
 

 

Tags :

Share via

More stories