பாகிஸ்தான் தாக்குதல் முறியடித்த இந்திய ராணுவம் .

by Editor / 09-05-2025 12:12:18am
பாகிஸ்தான் தாக்குதல் முறியடித்த இந்திய ராணுவம் .

இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை தாக்கி, அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும், இன்று ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலையும் பாகிஸ்தான் மேற்கொண்டது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்து தோல்வி அடைய செய்தது. இதில், அதிநவீன S 400 வான்வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இன்று இரவு, ஜம்மு & காஷ்மீரில், ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து அதனை முறியடித்திருக்கிறது. ஜம்மு பகுதியில், கட்ரா, அதன் அருகில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில், தெற்கு காந்திநகர் உள்ளிட்ட இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

 

Tags : பாகிஸ்தான் தாக்குதல் முறியடித்த இந்திய ராணுவம் .

Share via