கொச்சியில் இரண்டு படகுகள் பறிமுதல்

கொச்சி மரைன் டிரைவில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிகமாக ஏற்றிச் சென்ற படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறைகளை மீறியதற்காக இரண்டு படகுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 13 பயணிகள் கொள்ளளவு கொண்ட படகுகளில் 36 பேர் இருந்தனர். தனூர் படகு விபத்து சம்பவத்தை தொடர்ந்து, படகு சேவை நடைபெறும் பிற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். படகுகளில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை மீறக்கூடாது என படகு உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எச்சரிக்கையையும் மீறி, சில படகு உரிமையாளர்கள் செயல்படுகின்றனர்.
Tags :