திருமணத்துக்கு சம்மதிக்காததால் காதலியை கடத்திய காதலன்
ரஷ்யாவில் பெலா ரவோயன் என்ற 18 வயது சிறுமியும், அமிக் ஷமோயன் என்ற 20 வயது இளைஞனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அமிக் சமீபத்தில் திருமணம் செய்துகொள்வோம் என கூறியுள்ளார். பெலா ரவோயன் அதை நிராகரித்தார். சிறுமியின் தந்தை ஒரு பணக்கார இளைஞனுடன் தனது காதலியின் திருமணத்தை ஏற்பாடு செய்திருப்பதை இளைஞன் அறிந்து ஆத்திரமடைந்துள்ளார்.இதன் விளைவாக, அமிக் அவர்கள் பகுதியில் 'மணமகள் திருட்டு' என்ற பழங்கால நடைமுறையின்படி தனது காதலியை கடத்திச் சென்றார். உடனடியாக பெலாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். ரஷ்ய போலீசார் அவரை கடத்தலில் இருந்து விடுவித்தனர். அமிக் தனது காதலியை கடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
Tags :