கழிவறையில் ரகசிய கேமராவை வைத்து படம் பிடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் தனி நபருக்கு சொந்தமான வாடகை கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த வாடகை கட்டிடத்தில் 20 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பணிபுரிவோருக்கு கழிவறை ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனியாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு கழிவறைகள் தனித்தனியே அமைக்கப்பட்டு இருந்தபோதிலும் இந்த வாடகை கட்டிடத்தில் சலூன் கடை நடத்தி வரும் மிதுன் என்ற நபர் ஆண்கள் கழிவறை தூய்மையற்றுள்ளதாகவும் அதனால் பெண்கள் கழிவறையை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வரும் சக பெண்கள் அந்த கழிவறை பயன்படுத்தி வந்த நிலையில் தனியார் மருந்து கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது.
கழிப்பறை சுவற்றில் மேல் பகுதியில் கருப்பு நிற டப்பா போல் ஒன்று தெரிந்துள்ளது. கழிப்பறைக்கு சென்ற பெண் தனது முதலாளியிடம் கழிவறையில் கருப்பு நிற டப்பா ஒன்று உள்ளது என்று தெரிவித்த நிலையில் கழிவறைக்கு சென்று பார்வையிட்ட முதலாளி அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அந்தக் கழிவறையை யார் பயன்படுத்தி வருகிறார்கள் என்று விசாரணை மேற்கொள்ளும் பொழுது கந்தர்வக்கோட்டை யாதவர் தெரு பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் மிதுன் தான் ஆண்கள் கழிவறை தூய்மையற்று இருப்பதாக கூறி பெண்கள் கழிவறையை பயன்படுத்தி வந்ததாக அங்குள்ள பெண்கள் குற்றம் சாட்டினர். இதை அடுத்து அங்கு பணிபுரியும் பெண்கள் ரகசிய கேமரா குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்கள் கழிவறியை பயன்படுத்தி வந்த மிதுனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கட்டிடத்தின் முதலாளி கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கந்தர்வகோட்டை போலீசார் மிதுனிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணை அடிப்படையில் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தியை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் மிதுன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கந்தர்வக்கோட்டை கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : கழிவறையில் ரகசிய கேமராவை வைத்து படம் பிடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.