ஆசிட் கலந்த குளிர்பானம் மாணவனின் சிறுநீரகம் செயலிழப்பு

by Staff / 03-10-2022 01:54:22pm
ஆசிட் கலந்த குளிர்பானம் மாணவனின் சிறுநீரகம் செயலிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அஸ்வினுக்கு கடந்த 25ம் தேதி முதல் காய்ச்சல் அடித்தது. பின்னர், அவரது தாயார் ஷோபியா களியக்காவிளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார். மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் அஸ்வின் ஆசிட் திரவம் உட்கொண்டதாகவும் அதனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடந்த அவரது தாயார், அஸ்வினிடம் கேட்டபோது, பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில், அதே பள்ளியை சேர்ந்த அடையாளம் தெரியாத மாணவன் குளிர்பானம் கொடுத்தான். அதை குடித்த பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனதாக அஸ்வின் கூறியுள்ளான்.இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து பள்ளியில் படிப்பில் ஏற்பட்ட போட்டியா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via