சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன்: கனிம வள வாகனங்களை நிறுத்த கோரிக்கை.
தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு இயற்கை வளம் பாதுகாப்பு சங்கம் சார்பாக பொதுச் செயலாளர் ஜமீன் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்தமனுவில் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் ஆரம்பமாக உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு அண்டை மாநிலத்தில் இருந்து கர்நாடகா. ஆந்திரா . ஐயப்ப பக்தர்கள் தென்காசி செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவிற்கு சபரிமலைக்கு சென்று வருவார்கள். சபரிமலை அய்யப்பன் கோயில் சீசன் முடியும் வரை தமிழகத்தில் இருந்து தென்காசி வழியாக கனரக வாகனங்கள் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் கேரளாவிற்கு செல்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags : சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன்: கனிம வள வாகனங்களை நிறுத்த கோரிக்கை.



















