ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைமேம்பாலங்கள் மீது கார்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை அதன் உரிமையாளர்கள் நிறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் கனமழை வெள்ளம் ஏற்பட்ட போதும் கார்களை பாதுகாக்க மேம்பாலங்களில் கார்களை நிறுத்தியிருந்தனர். தற்போது வேளச்சேரியின் இரண்டு மேம்பாலங்கள் மீதும் கார்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. புயல் காரணமாக சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று மதியம் புயல் கரையைக் கடக்கும்.
Tags : ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை



















