புயல் எச்சரிக்கையையும் பொருள்படுத்தாத சுற்றுலா பயணிகள்.

by Editor / 30-11-2024 09:11:42am
புயல் எச்சரிக்கையையும் பொருள்படுத்தாத சுற்றுலா பயணிகள்.

பெஞ்சன் புயல் எதிரொலியாக தரங்கம்பாடி கடற்கரையில் கடுமையான கடல் சீற்றம். ஆள் உயரத்திற்கு மேல் எலும்பும் அலைகள், டேனிஷ் கோட்டை பிரதான மதில் சுவரை சுற்றி 10 அடி தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முள்வேலி தடுப்புச் சுவரை மோதும் கடல் அலைகளால் முள்வேலி தடுப்புச் சுவர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருள்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் 30க்கும் மேற்பட்டோர் செல்பி எடுத்தும் ஆள் உயரத்திற்கு மேலெழும்பும் கடல் அலைகளை ரசித்தும் வருகின்றனர்.தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருள்படுத்தாமல் பொதுமக்கள் செல்பி எடுத்தும் ஆள் உயரத்திற்கு மேலெழும்பும் கடல் அலைகளை ரசித்தும் வருகின்றனர்.

 

Tags : புயல் எச்சரிக்கையையும் பொருள்படுத்தாத சுற்றுலா பயணிகள்.

Share via