சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

by Admin / 04-12-2025 12:56:02am
 சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

டிட்வா புயலின் தொடர்ச்சியால் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடக்கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கோவை ,நீலகிரி போன்ற மேற்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழையின் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்.

 

Tags :

Share via