காங்கிரஸ் கட்சி  ஐந்து பேர் கொண்ட குழு அண்ணா அறிவாலயத்தில்தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்தது.

by Admin / 04-12-2025 12:45:21am
காங்கிரஸ் கட்சி  ஐந்து பேர் கொண்ட குழு அண்ணா அறிவாலயத்தில்தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்தது.

தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலினை திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்செல்வப் பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்சூரஜ் எம் .என் . ஹெக்டே, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ் ராஜேஷ் குமார் ஆகிய  ஐந்து பேர் கொண்ட குழு அண்ணா  அறிவாலயத்தில் சந்தித்து  முதற்கட்ட ஆலோசனைகளை நடத்தியது.இச்சந்திப்பு 2026 இல் நடக்க போகிற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளின் ஒரு முன்னோட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.. இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை பெறுவதற்கான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது..

காங்கிரஸ் கட்சி  ஐந்து பேர் கொண்ட குழு அண்ணா அறிவாலயத்தில்தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்தது.
 
Tags :

Share via