மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழ்நாட்டில் சென்னை தரமணி, பட்டாபிராம், கோயம்புத்தூரைத் தொடர்ந்து திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் டைடல் பூங்கா அமைய உள்ளது. சுமார் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த டைடல் பூங்கா அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த புதிய டைடல் பார்க் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
Tags : மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.